ஆவடியில் புதிய கட்டிடத்துக்கு மாறும் நூலகம்: 30 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு

4 months ago 12

ஆவடியில் 30 ஆண்டுகளாக பாழடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகம், புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படுகிறது. இதனால், வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையை அடுத்த ஆவடி மார்க்கெட், காந்தி சிலை அருகே 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நூலகம், கட்டிடம் சேதம் அடைந்த காரணத்தால், ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 1995-ம் ஆண்டு மாற்றப்பட்டது.

இந்த நூலகத்தில் 62 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. சுமார் 6,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினசரி 250-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஏராளமான இளைஞர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

Read Entire Article