ஆவடி அருகே கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு

3 months ago 21

சென்னை: ஆவடி அருகே கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தந்தவர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார். திருமுல்லைவாயிலில் டாஸ்மாக் பாரில் இருந்த முத்து என்பவரை விஸ்வநாதன் என்பவர் வெட்டியதாகவும், பழிக்குப்பழியாக தாக்குதல் நடந்ததாகவும் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆவடி காவல் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா, மது மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த ஆவடி காவல் ஆணையர் சங்கர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆவடி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் திருமுல்லைவாயில் உள்ள பார் ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு அந்த மர்ம கும்பல் முத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முத்து, ரத்த வெள்ளத்துடன் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஆவடி, திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே, ஆரிக்கமேடு பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக காவல்துறைக்கு முத்து தகவல் கொடுத்ததாகவும் இதனால் 3 பேர் கொண்ட கும்பலுடன் முத்துவிற்கு முன்விரோதம் ஏற்பட்டதாகவும், இந்த முன்விரோதம் காரணமாக விஸ்வநாதன் மற்றும் அவரின் மகன்கள் ஆகியோர் தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாகவும் முத்து வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆவடி அருகே கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Read Entire Article