ஆழ்வார்குறிச்சி அருகே புகையிலை விற்றவர் கைது

1 month ago 10

கடையம்,டிச.7: ஆழ்வார்குறிச்சி அருகே துப்பாக்குடிநாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சேர்ந்த ராமையா மகன் சிவபெருமாள் (58). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் கடையில் அதிரடி சோதனை செய்தனர். இதில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு செய்து வருவது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 15 கிராம் கொண்ட 45 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post ஆழ்வார்குறிச்சி அருகே புகையிலை விற்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article