“ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வன்மத்தை கக்குகிறார் முதல்வர் ஸ்டாலின்” - எல்.முருகன் ஆவேசம்

4 weeks ago 7

சென்னை: “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மத்தை கக்குகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி அவதூறு பிரசாரம் செய்யும் திமுக கூட்டணி கட்சிகள், தமிழில் ஒலிபரப்பப்படும் ஒரு சேனலின் பெயரில் தமிழே இல்லாமல் இருந்த நிலையில் டிடிதமிழ் என புகழ் சேர்த்தது மத்திய அரசு. எந்த ஒரு அரசும் தமிழக்கு செய்யாததை செய்தவர் பிரதமர் மோடி. சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி வார நிறைவு விழாவில் தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது வன்மத்தை கக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்.

Read Entire Article