சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் கையெழுத்திட்டு தெரிவித்துள்ள வாழ்த்து கவனம் ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும்” என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.