![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37985399-fjgj.webp)
தெஹ்ரான்,
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டாக நீடித்த நிலையில் தற்போது தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது. மேலும், இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், கடற்படை பலத்தை அதிகரிக்கும் விதமாக ஆளில்லா விமானம் தாங்கி போர் கப்பலை (drone-carrier warship) ஈரான் முதன் முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த போர் கப்பலில் ஆளில்லா விமானங்கள் (drone) தவிர ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.