*சுகாதாரத்துறையினர் நடவடிக்கை
ஆற்காடு : ஆற்காடு அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.
ஆற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சொக்கலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சத்யநாராயணன், ஜெயக்குமார், சீனிவாசன், சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் தாஜ்புரா பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற, புகைபிடிக்க அனுமதித்த 4 கடைகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.
மேலும், புகையிலை பொருட்கள் விற்கவோ, புகை பிடிக்கவோ அனுமதிக்க கூடாது என்று எச்சரித்து, புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடம் என்ற அறிவிப்பு பலகையை வைக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
The post ஆற்காடு அருகே புகையிலை பொருள் விற்ற 4 கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.