
ஆர்லியன்ஸ்,
பிரான்ஸ் நாட்டில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த செவ்வாய் கிழமை தொடங்கிய இந்த போட்டிகள் வருகிற 9-ந்தேதி வரை நடைபெறும்.
இதில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முந்தின சுற்றில் ஹாங்காங்கை சேர்ந்த ஜேசன் குனாவனை 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், காலிறுதிக்கு அவர் தகுதி பெற்றார். இதற்கு முன் நடந்த போட்டியில், இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூவை 21-17, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதேபோன்று மற்றொரு புறம் பிரனாய் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அவர்களுடைய போட்டிகளில் தோற்று வெளியேறினர். இதனால், இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு குறைந்து போயுள்ளது.