பெங்களூரு: ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் சீசன் -18 தொடர் மார்ச் 21ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இதில் அனைத்து அணிகளிலும் குறிப்பிட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டு, புதிய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன. இதனால் பல அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் (ஆர்சிபி) விராட் கோஹ்லி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்கள் மட்டும் தக்க வைக்கப்பட்டனர். கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட டு பிளெசிஸை ஆர்சிபி கழற்றிவிட்டது.
ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் ஆர்சிபி நிர்வாகம் எடுக்கவில்லை. இதனால் கேப்டனாக விராட் கோஹ்லியே நியமிக்கப்படலாம் என்ற கூறப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக அவர் பெரிய அளவில் இந்திய அணிக்காக ஸ்கோர் அடிக்காததால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த சூழலில், ஆர்பிசி கேப்டன் பதவியை ஏற்க விருப்பமில்லை என்று கோஹ்லி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆர்பிசி புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்பிசி அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களில் ரஜத் படிதாரும் ஒருவர். சையத் முஷ்டாக் அலி டிராபி (டி20) மற்றும் விஜய் ஹசாரே டிராபி (ஒருநாள்) ஆகியவற்றில் மத்தியப் பிரதேசத்தை வழிநடத்திய அனுபவம் ரஜத் படிதாருக்கு உள்ளது.
* உங்களுக்கு பின்னால் இருப்போம்: கோஹ்லி வாழ்த்து
ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து கோஹ்லி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘ரஜத், முதலில் நான் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அணியில் நீங்கள் வளர்ந்த விதத்தாலும், நீங்கள் செயல்பட்ட விதத்தாலும், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆர்சிபி ரசிகர்களின் இதயத்திலும் நீங்கள் ஒரு இடத்தைப் பிடித்துள்ளீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் விளையாடுவதைப் பார்க்க அவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். இது உங்களுக்கு மிகவும் தகுதியானது. நானும் மற்ற குழு உறுப்பினர்களும் உங்களுக்குப் பின்னால் இருப்போம். கேப்டன் பதவியில் வளர எங்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.’
ஆர்சிபி கேப்டனக்ள்
2008 ராகுல் டிராவிட்
2009 கெவின் பீட்டர்சன்
2009-10 அனில் கும்பளே
2011-2012 டேனியல் வெட்டோரி
2013-2021 விராட் கோஹ்லி
2022-2024 டு பிளெசிஸ்
2025 ரஜத் படிதார்
The post ஆர்சிபி புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமனம் appeared first on Dinakaran.