ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து கண்டனக் கூட்டம்: ஆயிரக்கணக்கானோரை அழைத்து வர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஏற்பாடு

1 month ago 5

சென்னை: ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து சென்னையில் நடைபெறும் கண்டனக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கானோரை அழைத்து வர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவருமான எம்.எஸ்.திரவியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் சார்பில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து மாபெரும் கண்டனக் கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கண்டன உரயைாற்றுகிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மேலிட பொறுப்பாளர், முன்னணி தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில், திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம். மேலும், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் வகையில், எனது தலைமையில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிவ ராஜசேகரன், டில்லி பாபு, தீர்த்தி, சுரேஷ்குமார், ராஜன், திலகர், சங்கீதா, சுமதி, அமிர்தவர்ஷினி, சுகன்யா, சுபாஷினி, தனலட்சுமி, பானுபிரியா ஆகியோர் ஆயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து கண்டனக் கூட்டம்: ஆயிரக்கணக்கானோரை அழைத்து வர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article