ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்?.. ஐகோர்ட் கேள்வி

4 hours ago 3

சென்னை: ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்? என உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கவில்லை எனக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன்; 2021 முதல் 2023 கல்வியாண்டு வரை எந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.

முழு நிதியையும் மாநில அரசே செலுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. கூட இல்ல்லை என்பதால் ஒதுக்கவில்லை. ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது. RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேரக்கை இதுவரை தொடங்கவில்லை” என வாதிட்டார். இதற்கு ஒன்றிய அரசு சார்பில் சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கக்பபடவில்லை” பதில் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் தமிழகத்திற்கான கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை என்பது குறித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி குறித்தும் நாளை மதியம் 2:15 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post ஆர்.டி.இ சட்டத்தின் கீழ் 25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன்?.. ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article