ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

2 months ago 13

சென்னை,

ஆர்.ஜே. பாலாஜி கடைசியாக 'சிங்கப்பூர் சலூன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி தற்போது 'சொர்க்கவாசல்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இன்னொருபுறம் நடிகர் சூர்யாவின் 45 திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கவுள்ளார். இந்த படம் பேண்டசி கலந்த ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என தகவல் வெளியானது. 'சூர்யா 45' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் அம்மாமுத்து சூர்யா இயக்கும் இந்த படத்துக்கு 'ஹேப்பி என்டிங்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். டைட்டில் டீசரில் ஆர்.ஜே. பாலாஜி தனது காதல் தோல்வி கதைகளை கூற, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டைட்டில் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article