ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை தாசில்தாரராக ரஜினி பொறுப்பேற்றுக்கொண்டார். ஆர்.கே.பேட்டை தாசில்தாராக பாரதி பணியாற்றி வந்தார். இவர், சென்னை கோயம்பேடு சிறப்பு தாசில்தாரராக பணியிட மாற்றம் செய்யபட்டார். அதைத்தொடர்ந்து நேற்று ஆர்.கே.பேட்டை தாசில்தாரராக ரஜினி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், ஆவடி துணை தாசில்தாரராக 5 மாதம் பணியாற்றி வந்தார். தற்போது, ஆர்.கே.பேட்டையில் புதிய தாசில்தாரராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு வருவாய் துறையினர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
The post ஆர்.கே.பேட்டை தாசில்தார் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.