
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ராம் பொத்தினேனி, வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களை தொடர்ந்து, 'டபுள் இஸ்மார்ட்' எனும் படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தைத்தொடர்ந்து, தனது 22-வது படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'ஆர்ஏபிஓ 22' என பெயரிடப்பட்டுள்ளது. மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குனர் மகேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் நடித்துள்ள 'உபேந்திரா' இந்த படத்தில் இணைந்துள்ளார். வருண் தேஜின் 'கனி' படத்திற்கு பிறகு உபேந்திரா தெலுங்கு சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
இப்படத்தில் அவர் 'சூர்ய குமார்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வருகிற 15-ம் தேதி ராம் பொத்தினேனியின் பிறந்தநாளில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாக உள்ளது.