ஆரோவில்லில் தமிழ் வரலாற்றின் பண்பாட்டு விழா

6 hours ago 1

 

வானூர், பிப். 28: ஆரோவில் அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் பண்பாட்டு மற்றும் அறிவுசார் மரபுகளைப் போற்றும் விழா 6 நாட்கள் நடைபெற்றது. கடைசி நாள் விழாவில் தமிழ் வரலாற்றின் சமூக- அரசியல் பார்வை என்ற தலைப்பில் டாக்டர் சிவப்பிரகாசம் பேசினார். அப்போது தமிழ் மரபின் பாதுகாப்பில் நாடகங்கள் மற்றும் தெய்வீக சித்தாந்தங்களின் பங்கு என்ற தலைப்பில் தமிழ் மரபையும் மொழியையும் பாதுகாத்து வந்ததின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், சைவை, வைணவ பக்தர்களின் பங்களிப்பு என்ற தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்தும் விளக்கி பேசினார். ஆங்கிலேயர் மற்றும் வேடிக்கையாளர்கள் தமிழ் மொழியை எவ்வாறு பயன்படுத்தினார்கள்? பிரிட்டிஷ் பயணிகள் மற்றும் மிஷனரிகள், குறிப்பாக வீரமாமுனிவர் ஆகியோரும் தமிழ்மொழியை கிறிஸ்தவ மத பிரசாரத்திற்கு பயன்படுத்திய நிகழ்வுகளையும் சிவப்பிரகாசம் விளக்கினார்.இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆர்வலர்கள், புலவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

The post ஆரோவில்லில் தமிழ் வரலாற்றின் பண்பாட்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article