ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்தும் வழிகாட்டி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை எச்சரிக்கை

1 month ago 4

சென்னை: ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்தும் வழிகாட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது. உயர்கல்வித்துறையின் செயலாளர், அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை, சில வழிகாட்டுநர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களை சில வழிகாட்டுநர்கள், தங்களின் வீட்டு வேலைகளை செய்யவும், தனிப்பட்ட வேலைகளை செய்ய துன்புறுத்தப்படுவதாகவும், செய்யவில்லை என்றால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவதாகவும் அரசின் கவனத்துக்கு புகார்கள் வந்துள்ளன.

மேலும், ஆராய்ச்சி படிப்பை முடிக்க பணம் மற்றும் அதற்கு நிகரான பொருள் வழங்க வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் புகார் வந்துள்ளது. பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தங்கள் குறைகளை இணையதளம் வாயிலாக தெரிவிப்பதற்காகவும், அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆராய்ச்சி படிப்பு மாணவர்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்தும் வழிகாட்டி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article