ஆயுத பூஜை விடுமுறை: பஸ்களில் சொந்த ஊர் செல்ல 30 ஆயிரம் பேர் முன்பதிவு

3 months ago 24

சென்னை,

ஆயுத பூஜை வருகிற 11-ந்தேதியும், விஜயதசமி வருகிற 12-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1,715 சிறப்பு பஸ்களை இயக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணிக்க இன்று (புதன்கிழமை) 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நாளை (வியாழக்கிழமை) 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என 2 நாட்களில் பயணம் செய்ய ஒட்டு மொத்தமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

Read Entire Article