ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாராஷ்டிரா, சந்திராப்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ‘டேஞ்சர் பில்டிங் வொர்க்கர்’’ பணியிடங்கள் காலியாக உள்ளன.
பணி: Danger Building Worker. மொத்த இடங்கள்: 135 இடங்கள் (பொது-11, ஒபிசி-53, எஸ்சி-33, எஸ்டி-13, பொருளாதார பிற்பட்டோர்-25). இவற்றில் 25 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வயது: பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 40க்குள். ஒபிசி, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: என்சிவிடி நிறுவனத்திடமிருந்து பிட்டர், ஜெனரல் மிஷினிஸ்ட், டர்னர், ஷீட் மெட்டல் வொர்க்கர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பாய்லர் அட்டெண்டென்ட், மெக்கானிக் இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ், ரெப்ரிஜெரேஷன் மற்றும் ஏர்கண்டிஷனிங் மெக்கானிக் ஆகிய டிரேடுகளில் அப்ரன்டிஸ்ஷிப் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். https://munitionsindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.07.2025.
The post ஆயுத தொழிற்சாலையில் 135 இடங்கள் appeared first on Dinakaran.