கேரள செவிலியர் நிமிஷா வழக்கு.. பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!

10 hours ago 1

டெல்லி: கேரள செவிலியர் நிமிஷா வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2017ம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மெஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் அவர் சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 36 வயதான நிமிஷா பிரியா 2020ம் ஆண்டு முதல் மரண தண்டனை கைதியாக இருந்து வருகிறார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஏமனின் உச்சநீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடு மனு 2023ம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் உச்ச அரசியல் கவுன்சிலின் தலைவர் மஹ்தி அல்-மஷாத் அவரது மரண தண்டனையை உறுதி செய்தார். ஏமனின் ஷரியா சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திடம் ரத்தப் பணம் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் நிமிஷா பிரியாவை காப்பாற்றக் கடைசியாக ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஏமனில் ஜூலை 16ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள கேரள செவிலியர் நிமிஷா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் நிமிஷாவின் தூக்கு தண்டனையை நிறுத்த ஒன்றிய அரசு தலையிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post கேரள செவிலியர் நிமிஷா வழக்கு.. பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Read Entire Article