பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டார். இதனால் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும் ஆனந்தனின் தரப்பினர் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில்பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் வீடுஅலுவலகம் உள்ளபகுதியில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஆனந்தன் தரப்பினர் அனுமதி கேட்டனர். அந்த இடத்தில் சட்டம்ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் பள்ளிமருத்துவமனைகள் உள்ள பகுதியில் என்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்று வேறிடத்தில் நிகழ்ச்சி நடத்திக்கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தினர். இந்தநிலையில் நேற்று நினைவு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார்அண்ணாநகர் துணை கமிஷனர் சினேகா பிரியா தலைமையில் 7 உதவி கமிஷனர்கள்20 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 600 போலீசார் புளியந்தோப்பு சரகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெரம்பூரில் அனைத்து பகுதிகளிலும் வாகனசோதனை நடத்தினர்.
The post ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் புளியந்தோப்பில் போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.