ஆம்னி பஸ்கள் உட்பட 7 வாகனங்களில் ஏர் ஹாரன் பறிமுதல் வட்டார போக்குவரத்துத்துறை நடவடிக்ைக வேலூர் பள்ளிகொண்டா டோல்கேட்டில்

4 months ago 12

ேவலூர், ஜன.7: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் ஆம்னி பஸ்கள் உட்பட 7 வாகனங்களில் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் கடந்த 1ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சாலை பாதுகாப்பு மாதமான 6வதுநாளில் வேலூர் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் ஆர்டிஓ சம்பத் அறிவுறுத்தலின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், பள்ளிகொண்டா போலீசார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளிகொண்டா டோல்கேட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்ேபாது, டோல்கேட் வழியாக வந்த வாகனங்களை சோதனையிட்டனர். அதில் ஆம்னி பஸ்கள், கனரக வாகனங்கள் உட்பட 7 வாகனங்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 7 வாகனங்களில் இருந்த ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து சோதனை அறிக்கை வழங்கினர். மேலும் 7 வாகன உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்தனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது, அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடாது. சீருடை அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post ஆம்னி பஸ்கள் உட்பட 7 வாகனங்களில் ஏர் ஹாரன் பறிமுதல் வட்டார போக்குவரத்துத்துறை நடவடிக்ைக வேலூர் பள்ளிகொண்டா டோல்கேட்டில் appeared first on Dinakaran.

Read Entire Article