பெரம்பலூர்,மே.22: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 34ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கவுல்பாளையத்திலுள்ள அவரது சிலைமுன்பு காங்கிரஸ் கட்சி சார்பாக நினைவஞ்சலி செலுத்தப் பட்டது. இந்தியநாட்டின் முன்னாள் பாரத பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரம்பலூர்- அரியலூர் சாலையில், கவுல் பாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் நேற்று (21ம் தேதி) புதன் கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் சாமிதுரை முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் தங்க. தமிழ்செல்வன் தலைமையில் ராஜிவ்காந்தியின் சிலைக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தி, சிலையின்முன்பாக பயங்கரவாத உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், மூத்த நிர்வாகி வேப்பந்தட்டை சின்னசாமி, ஓபிசி பிரிவின் மாநிலச்செயலாளர் வேப்பந் தட்டை சின்ராஜ், ஆர்ஜிபிஆர்எஸ் மாவட்ட தலைவர் துரை ராமச்சந்திரன், சரண் ராஜ், பன்னீர் செல்வம், கணேசன், ரவி,மணி, செந்தில், பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு நினைவஞ்சலியை செலுத்தினர்.
The post கவுல்பாளையத்தில் ராஜீவ் காந்தியின் 34ம் ஆண்டு நினைவு தினம் appeared first on Dinakaran.