ஆப்ரிக்காவில் ராணுவ முகாம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: 40 வீரர்கள் பலி

6 months ago 20

டாகர்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட்டின் மேற்கு பகுதியில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.இந்த அதிரடி தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட அந்த கொலையாளிகள் தப்பி ஓடினர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .சம்பவம் நடந்த முகாமுக்கு நேற்று சென்ற அதிபர் இட்ரிக் டெபி, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி நாடு முழுவதும் தேடுதல் வேட்டையை ராணுவம் முடுக்கி விட்டுள்ளது.

Read Entire Article