ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி கல்லூரி மாணவியிடம் பணம், நகை பறித்த தந்தை, மகன் கைது

2 months ago 11

பூந்தமல்லி: மும்பையில் வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர் கல்லூரி விடுமுறை நாட்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த பெண் அண்மையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகாவைச் சேர்ந்த சுஜித் (27) என்பவர் என்னுடன் நட்பாக பேசி வந்தார். இருவரும் பேசி பழகி வந்த நிலையில், அவர் அடிக்கடி தனக்குத்தானே கத்தியால் கீறிக்கொண்டு நிர்வாணமாக வீடியோ கால் செய்யும்படி என்னை வற்புறுத்தினார்.

இதையடுத்து இரண்டு முறை வீடியோ கால் செய்தேன். அந்த வீடியோவை கடந்த ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சுஜித் பணம் கேட்டு மிரட்டினார். இதையடுத்து பலமுறை மிரட்டி நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்கவில்லை என்றால் மீதமுள்ள ஆபாச படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவோம் என்று சுஜித் மற்றும் அவரது தந்தை வின்சென்ட் (55) ஆகிய இருவரும் மிரட்டியதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுஜித் மற்றும் அவரது தந்தை வின்சென்ட் ஆகிய இருவரையும் ேநற்று கைது செய்து விசாரித்தபோது இளம் பெண்ணின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

The post ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி கல்லூரி மாணவியிடம் பணம், நகை பறித்த தந்தை, மகன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article