டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை; அது தொடரும் என ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்ச ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. உயர் ரக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை; அது தொடரும். நமது நாட்டுப் படைகள் வீரதீரத்தை பறைசாற்றி உள்ளது. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு துல்லியமாக நமது படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தியாவின் தரத்தையும், அதன் மீதான நம்பிக்கையையும் பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன. அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொது மக்களை பாதிக்காத வகையில், தாக்குதல் நடத்தியுள்ளோம். மிகத் துல்லியமாக தாக்கியதால் மிக மிகக் குறைவான பாதிப்பே ஏற்பட்டது. இந்தியாவின் பொறுமையை பலவீனமாக நினைத்துக் கொள்ள வேண்டாம். எது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை; அது தொடரும் : ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு appeared first on Dinakaran.