மதுரை : ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போலீஸ் வேன் மீது ஷேர் ஆட்டோ மோதியதில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்லபாண்டிக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டியதாக 2019ல் பரமக்குடி நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செல்லபாண்டி மனு தாக்கல் செய்தார்.
இநத மனு விசாரணையின் போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “குடிபோதையில் வாகனம் ஓட்டி, விபத்து ஏற்படுத்தியதை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. அதிகமான நபர்களை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். உத்தரவுகளுக்கு ஏற்றார் போல் மோட்டார் வாகன விதிகளில் தேவையான திருத்தம் மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிடுகிறோம். தண்டனையை ரத்து செய்ய, ஷேர் ஆட்டோ ஓட்டுநர் செல்ல பாண்டியன் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்கிறோம், “இவ்வாறு தெரிவித்தனர்.
The post ஆபத்தான முறையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.