ஆன்லைன் ரம்மி ஒழுங்கு விதிகளை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு தள்ளிவைப்பு

3 hours ago 2

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன் லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து கடந்த பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து பிளே கேம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் பிளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post ஆன்லைன் ரம்மி ஒழுங்கு விதிகளை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article