ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடி தடை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

23 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடி தடை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். nதமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் இதுவரை 84 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 47 பேர் தான் உயிரிழந்துள்ளதாக அரசு தவறான தகவல்களை அளித்திருப்பதை ஏற்க முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழக மக்கள் பணத்தை இழப்பதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு. எனவே, இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவிப்பதை விடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடி தடை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article