ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி கணக்கை துவங்கியது ஹைதராபாத் அணி!

1 day ago 3

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நேற்று முதல் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணி மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இன்று 2வது போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே அதிரடி பேட்டிங்கை தொடங்கியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை ஹைதராபாத் அணி குவித்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை பெற்ற அணிகளின் பட்டியலில் முதல் மூன்று இடத்தை ஹைதராபாத் அணி பெற்றுள்ளது.கடந்த ஆண்டு ஹைதராபாத் அணி எடுத்த 287 ரன்கள்தான் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்திலேயே சறுக்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன் எடுத்து அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அதிகபட்சமாக சாம்சன் 66 ரன்களும், ஜூரேல் 70 ரன்களும், ஹெட்மேயர் 42 ரன்களும், ஷுபம் துபே 34 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது.

The post ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி கணக்கை துவங்கியது ஹைதராபாத் அணி! appeared first on Dinakaran.

Read Entire Article