அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன் லஞ்ச வழக்கில் கைது

1 day ago 3

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகனை லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளருக்கு ஒப்பந்தத்திற்கு சாதகமாக செயல்பட லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் இளமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.7.44 கோடி மதிப்புள்ள சாலை ஒப்பந்தப் பணிக்கு சாதகமாக கையெழுத்திடுவதற்காக, ஒரு சதவீதம் லஞ்சம் என்ற அடிப்படையில் ஆறு லட்சம் கேட்டதாகவும், அதில் இரண்டு லட்சம் பணத்தை கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அதிகாரிகள் பிடிபட்டனர். அவர்கள் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் ரூ.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் அண்ணன் மகன் இளமுருகன் லஞ்ச வழக்கில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article