![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/28/36192175-ana.webp)
சென்னை,
தெலுங்கு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆனந்த் வர்தன்.
அதன்படி, பிரேமிஞ்சுகுண்டம் ரா, சூர்யவன்சம், மனசந்த நுவ்வே போன்ற சூப்பர் ஹிட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஏஆர் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் பிரசன்ன குமார் எழுதி இயக்கும் படம் நிதுரிஞ்சு ஜஹாபனா.
இப்படத்தில் நவமி கயாக் மற்றும் ரோஷ்னி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.