![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38800875-badminton.webp)
கியாங்டா,
ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் கியாங்டாவில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் மக்காவை நாளை சந்திக்கிறது. இதில் லக்ஷய சென், பிரணாய் உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர்கள் களமீறங்குகின்றனர்.
காயம் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சிந்து இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த தொடரில் இந்திய அணி கடந்த முறை வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.