ஆந்திராவில் தொடர் மழையால் திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்தன: பக்தர்கள் உயிர் தப்பினர்

1 month ago 5

திருமலை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஆந்திராவின் தென் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சித்தூர், திருப்பதி, கடப்பா, நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது சாரல் மழை பெய்கிறது. இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2வது மலைப்பாதை சாலையில் உள்ள விநாயகர் கோயில் அருகே நேற்று காலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

மலையில் இருந்து பெரிய பாறாங்கற்கள் சரிந்து சாலையில் விழுந்தன. அந்த சமயத்தில் எந்த வாகனங்களும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று பாறாங்கற்களை அகற்றினர்.

The post ஆந்திராவில் தொடர் மழையால் திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்தன: பக்தர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article