அமராவதி,
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்தியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி 6 கிலோ தங்க ஆபரணங்களால் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் 4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்களாலும் பரமேஸ்வரி அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பான அலங்காரத்தைக் காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.