ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்

2 months ago 11
திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலா வந்திருந்த ஆந்திர பயணிகளின் பேருந்தில் ஏறி, உடமைகளைத் திருட முயன்ற வெளிமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் அவனைத் தப்பிக்க வைத்துவிட்டதாகப் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நள்ளிரவில் மொத்தம் மூன்று நபர்கள் பேருந்துக்குள் ஏறி திருட முயன்றதாகவும் பேருந்தின் ஓட்டுநர் பார்த்துவிட்டுக் கூச்சலிட்டதும் அவர்களில் இருவர் தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பிடிபட்ட இளைஞர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் தோன்றியதால் விடுவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article