
அமராவதி,
ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணுக்கு அடையாளம் மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது. மர்ம நபர் ஒருவர் ஜனசேனா கட்சி அலுவலத்தை தொடர்பு கொண்டு பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும், அவரை குறிவைத்து அவதூறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாகவும் ஜனசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனசேனா கட்சியின் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- துணை முதல் மந்திரி பவன் கல்யாணின் அலுவல் ஊழியர்களுக்கு அகண்டக்குடியில் இருந்து கொலை மிரட்டல் வந்தது. அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பவன் கல்யாணை கொல்லப்போவதாக மிரட்டினார். மேலும் அவர் தொடர்பாக அவதூறான குறுஞ்செய்திகளையும் அனுப்பினார் என்று தெரிவித்தது