'ஆதிபுருஷ்': 'விமர்சனங்களிலிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்' - எழுத்தாளர் மனோஜ் முன்டாஷிர்

3 months ago 28

சென்னை,

ஓம் ரவுத் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆதிபுருஷ் . இப்படத்தில் பிரபாஸ், சைப் அலி கான், கிருத்தி சனோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மனோஜ் முன்டாஷிர் வசனம் எழுதியிருந்தார். சுமார் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக ஆதிபுருஷ் எழுத்தாளர் மனோஜ் முன்டாஷிர் படத்தின் வசனங்களுக்காக பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், ஆதிபுருஷ் விமர்சனத்திலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக எழுத்தாளர் மனோஜ் முன்டாஷிர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'இன்று இருப்பது நாளை இருக்காது, இன்று நல்லது என நினைப்பது நாளை கெட்டதாக இருக்கலாம், இன்று கெட்டதாக இருப்பது நாளை நல்லதாக மாறலாம் என்பதை இந்த விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொண்டேன். எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதையும் புரிந்து கொண்டேன். அதனால், நான் நிறுத்தப்போவதில்லை. தொடர்ந்து உழைப்பேன். பாலிவுட் ஒரு சந்தை. அதில், லாபம் மட்டுமே விதி' என்றார்.

'ஆதிபுருஷ்' திரைப்படம் முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த போதிலும் முடிவில் ரூ.393 கோடி மட்டுமே வசூலிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article