
சென்னை,
கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'தி ஒடிஸி'யின் முதல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
2023-ல் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற 'ஓப்பன்ஹைமர்' படத்திற்குப் பிறகு கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் படம் 'தி ஒடிஸி'.
இதில், மேட் டாமன் ஒடிஸியஸாக நடிக்கிறார். மேலும், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா, லூபிடா நியோங்கோ, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரோன், ஜான் பெர்ன்தால், பென்னி சப்டி, ஜான் லெகுய்சாமோ மற்றும் எலியட் பேஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் அடுத்தாண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.