ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள்

2 weeks ago 2

தஞ்சாவூர், ஜன.21: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: மனிதநேய வார விழா வரும் 24ம் தேதிமுதல் 30 வரை நடைபெறுகிறது.

தஞ்சாவூர் அரசுப் பொருட்காட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் செய்தித் துறை சார்பில் புகைப்பட கண்காட்சியும், 25ல் அனைத்து ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டியும், 26 அன்று அரசு அகரப்பேட்டை ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஆதிதிராவிடர் குடியிருப்பில் தேநீர் அருந்துதல், 27 அன்று காவல்துறை (குடியுரிமை பாதுகாப்பு பிரிவு) மனித நேயம் மனித உரிமைகள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டக் கூறுகள் குறித்து விழாவும், 28 அன்று கலை பண்பாட்டுத்துறை மூலம் தெருக்கூத்து தீண்டாமை விழிப்புணர்வு குறித்து நாடகமும்,

29 அன்று சமூக பொருளாதார மேம்பாடு சிந்தனை குறித்து விழாவும், 30 அன்று தஞ்சாவூர் மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி நிறைவு நாள் விழா மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மனித நேய வார விழாவினை சிறப்பாகவும். செம்மையாகவும் நடத்திட வேண்டும் என இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article