சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ – மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்குவதற்கு பதிலாக, அவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன்களை வளர்த்து பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) ரூ.12,000, ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படும். இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/adtw_t_90_ms_2024.pdf மற்றும் https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/adtw_t_5_ms_2025.pdf என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பம் 30.01.2025ல் இருந்து விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர் https://ee.kobotoolbox.org/x/nMU1hMpq என்ற இணைப்பில் நேரடியாக 28.02.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்திறன் ஊக்கத்திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.