ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு குத்தகை, வாடகை முறையில் தொழிற்கூடங்கள்

2 weeks ago 4

அரியலூர், ஏப். 2: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ் நாடு அரசு ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2024-25 ம் ஆண்டு சட்டபேரவை புதிய அறிவிப்பில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு தொழிற்பேட்டைகள் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும் என அறிவித்தார் .

அதனடிப்படையில், தற்போது முதலிபாளையம் மற்றும் ஈங்கூர் தொழிற்பேட்டையிலும் புனரமைப்புப் பணிகள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு மற்றும் பெரு தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு பயன்பெறும் வகையில் வாடகை மற்றும் குத்தகை முறையில் காலிமனையாகவோ மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கூடங்களாகவோ, ஒற்றைமாடி மற்றும் பலமாடி தொழிற்கூடங்களாவோ அமைத்து தேவைக்கேற்ப குறுகிய அல்லது நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்க அரசு தற்போது முன் வந்துள்ளதால் பயன் பெற விண்ண ப்பத்துடன் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

எனவே தொழில் செய்வதற்கு மேற்கண்ட ஏதேனும் முறையில் தொழிற்கூடங்களை பெற விண்ணப்பிக்கும்முன் விருப்பமுள்ளவர்கள்வரு கின்ற ஏப்ரல் 4ம் தேதி காலை 10 மணியளவில் ஈங்கூர் தொழிற்பேட்டையில் தள பார்வையிடவும், முதலிபாளையம் தொழிற்பேட்டைக்கு அழைத்து செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தளத்தினை பார்வையிட்ட பிறகு அலுவலக தேவை படி வத்தின் மூலம் அவர்களின் விருப்பத்தை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதில் பங்கு பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும் மேலும் கூடுதல் விபரங்களுக்கு 9150277723 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் வரவேற்பு
விண்ணப்பிக்கும்முன் விருப்பமுள்ளவர்கள்வரு கின்ற ஏப்ரல் 4ம் தேதி காலை 10 மணியளவில் ஈங்கூர் தொழிற்பேட்டையில் தள பார்வையிடவும், முதலிபாளையம் தொழிற்பேட்டைக்கு அழைத்து செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு குத்தகை, வாடகை முறையில் தொழிற்கூடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article