பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த வடமதுரையில் பழமைவாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில், ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தபோது அங்குள்ள கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் இருபுறமும் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
அதில், ராஜேந்திரசோழனின் 25வது ஆண்டு ஆட்சியில் நம்பிராட்டி அம்மையாருக்கு இறையிலியாக 5 குழி நிலம் கொடுத்துள்ளதும் பிரம்மதேயமாக, சதுர்வேத மங்களமாக அளிக்கப்பட்டதும் குறிப்பிட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் ராஜராஜசோழனின் கல்வெட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அங்குள்ள சிவன் கோயில் மேல்விதானத்தில் சோழர் காலத்து படைபிரிவினரின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் சோழர் காலத்தில் இந்த இடம் சிறப்புற்று விளங்கியுள்ளது தெரியவந்துள்ளது’ என்று தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
The post ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ராஜராஜ, ராஜேந்திர சோழரின் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு: பெரியபாளையம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.