ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு மாநில அளவிலான திறன் வளர்ப்பு பயிற்சி

2 hours ago 1

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போரின் உரிமைகளை அங்கீகரிக்கும் பொருட்டு ஒன்றிய அரசால் பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 இயற்றப்பட்டு பழங்குடியினர் குடியிருக்கும் வன நிலங்களுக்கு புவியியல் தரவின் அடிப்படையில், தனி நபர் உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்படுகின்றன.

இதன்படி, இன்று (06.02.2025) காலை 10.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை சென்னை தலைமைச் செயலகத்தில் வன உரிமைச் சட்டத்தில் தனி நபர் உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் வழங்குவது உட்பட அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு மாநில அளவிலான திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வன உரிமைச் சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைகள், சுற்றாணைகள் மற்றும் விதிகள் அடங்கிய தொகுப்பு புத்தகம் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தால் வெளியிடப்பட்டது.

இத்திறன் வளர்ப்புப் பயிற்சியில், பேராசியர் அகிலா பிகாரி ஒடா,(ஓய்வு), Advisor to President of India on Tribal Museum, Senior Advisor UNICEF, ஷோமோனா கண்ணா, Advocate, Supreme Court of India and Former Legal Consultant to MoTA, Government of India, கிரி ராவ், Knowledge Partner, Tamil Nadu & Executive Director, Vasundhara, Odisha, ராமசுப்ரமணியன், Director, Samanvaya, ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர்.

மேலும், வன உரிமைச் சட்டம், 2006-ன்கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள வெவ்வேறு வகையான உரிமைகள், இச்சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதற்கட்டமாக, பழங்குடியினர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களை உள்ளடக்கிய வரைபடம், தகவல் தொழில்நுட்ப வலைதளம் மற்றும் மாநிலத்தில் இதற்கென வன உரிமைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article