ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்காக புதிய திட்டம்

3 hours ago 3

சென்னை,

2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண்மை பட்ஜெட் உரையின் போது உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

1,000 முதல்-அமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு திட்டத்துக்கு ரூ.24 கோடி.

டெல்டா அல்லாத பயிர் சாகுபடியை அதிகரிக்க 102 கோடி ஒதுக்கீடு. மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.40.27 கோடி. மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் வேளாண் எந்திரம் உள்ளிட்டவை வழங்க ரூ.22.80 கோடி ஒதுக்கீடு

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.12 கோடியில் திட்டம். ரூ.108 கோடியே 6 லட்சம் செலவில் உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம்

ரூ.52 கோடியே 44 லட்சம் செலவில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம். வேளாண்மையில் அதிக உற்பத்தி மற்றும் புதிய தொழில் நுட்பங்களை கண்டறியவும் விவசாயிகளுக்கு பரிசுகள்.

உழவர்களை அவர்களது கிராமங்களிலேயே சந்தித்து, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். மண்வளத்தினை மேம்படுத்திட முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.142 கோடி ஒதுக்கீடு.

உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம். 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ.5,242 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க, "தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை. ரூ.297 கோடியில் கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல்

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள், பிற இடுபொருட்கள் உழவர்களுக்கு விநியோகம் ரூ. 10.63 கோடி

கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம்

மக்களின் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்வதுடன், விவசாயிகள் வருமானத்தை உயர்த்திட ரூ.125 கோடி

பாரம்பரிய காய்கறிகள் இரகங்களின் ஊக்குவிப்பு

பாரம்பரிய காய்கறி இரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ள ரூ.2.4 கோடி

ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களின் பொருளாதார சுமையை குறைக்க ரூ.21 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article