ஆதவ் அர்ஜூனா பேச்சு.. மக்களால் தேர்வு செய்யப்பட்டுதான் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில்!!

1 month ago 10

வேலூர்: மக்களால் தேர்வு செய்யப்பட்டுதான் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் த.வெ.க. தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அது அகற்றப்பட வேண்டும். பிறப்பால் இன்னொரு முதல்வர் பதவியேற்க கூடாது என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று வேலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்; மக்களால் தேர்வு செய்யப்பட்டுதான் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. மக்களால் தேர்வு செய்துதான் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார். மக்களாட்சி தான் நடக்கிறது. இந்த அறிவுகூட இல்லையா என்று பதில் அளித்தார். மேலும், விஜய் பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், ‘நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை’ என பதில் அளித்தார்.

The post ஆதவ் அர்ஜூனா பேச்சு.. மக்களால் தேர்வு செய்யப்பட்டுதான் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில்!! appeared first on Dinakaran.

Read Entire Article