துரைப்பாக்கம்: சென்னை காரப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் அன்னை பாத்திமா குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. 110 குழந்தைகள் மற்றும் முதியோர் தங்கி உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் காப்பகத்தில் உள்ள முதியவர்கள், குழந்தைகளுடன் பொங்கல் வைத்து வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் அங்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான உரியடி, லெமன் ஸ்பூன், நொண்டி, ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி கமிஷனர் சுந்தர்ராஜ் பரிசு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து காப்பகத்திற்கு அரிசி, எண்ணெய், முதியவர்களுக்கு மூட்டுவலி தைலம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் கருணாகரன், தினேஷ் குமார், உதவி ஆய்வாளர் கருணாநிதி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
The post ஆதரவற்றோர் காப்பகத்தில் பொங்கல் கொண்டாட்டம் appeared first on Dinakaran.