ஆட்சேபனையற்ற பகுதிகளில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

3 months ago 10

சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சி பகுதிகளில் அடுத்த 6 மாதங்களுக்குள் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து, நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விரைவில் வரும் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, பட்ஜெட் ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்படும். அந்த வகையில், வரும் நிதியாண்டுக்கு தற்போதைய திமுக அரசு 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

Read Entire Article