ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை இந்த மாநாடு: அண்ணாமலை பேச்சு

1 week ago 4

மதுரை,

இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் கலந்துகொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

இவ்வளவு பெரிய கூட்டம்.இது ஒரு சாதாரணமான ஒரு கூட்டம் இல்லை. ஒரு இனம் தன்னுடைய குரலை உறக்க சொல்கிறது. தங்களுடைய உரிமையை நிலைநாட்ட துடிக்கிறது. எங்கெல்லாம் சனாதன தர்மத்துக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் அங்கே நான் இருப்பேன் என்று சொல்லி இது தான் நம் முதல் வேலை என்று இங்கு வந்திருக்கிறார் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண். 

அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்து மதத்தில் பெரிய ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் இன்னும் அரசியல்வாதிகள் பழைய அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆன்மிக ஆட்சி தேவை. தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது.கொள்கைக்காக 5 லட்சம் பேர் வந்துள்ளனர், இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை" இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article