ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்க்கும் போது அதனுடைய கழிவுகளே அவற்றிற்கு நோயை உண்டாக்க கூடும். இதனை தவிர்க்க தினமும் ஒரு முறை பட்டியை சுத்தம் செய்வது அவசியமான ஒன்று. குறிப்பாக மழைகாலங்களில் ஆடுகளை துள்ளுமாரி எனும் நோய் அதிகம் தாக்கக்கூடும். மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப்பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இதற்கான அறிகுறி ஆடுகள் வயிற்று வலியால் கத்தியபடியே இருக்கும். கழுத்து வளைந்து கால்கள் பின்னி வலிப்பு ஏற்பட்டு துள்ளி விழுந்து இறக்க நேரிடும். துள்ளுமாரி நோய் இறைச்சிக்காக வளர்க்கப்படும் அல்லது மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளையே பெரும்பாலும் தாக்கும். இக்கிருமி இயல்பாகவே மண்ணில் பரவியிருக்கும். மேலும், செம்மறியாட்டின் குடலிலும் சிறிதளவில் இருக்கும். மழைக்காலமான ஜூலை – அக்டோபரில் இந்நோய் அதிகமாக இருந்தாலும், வெயில் காலமான மார்ச் – ஜூன் மற்றும் குளிர் காலமான நவம்பர் டிசம்பரிலும் இளம் செம்மறியாடுகளைத் தாக்கும். சிலசமயம் வெள்ளாடுகள் அல்லது கன்றுகளையும் இந்நோய் தாக்கும். 3-12 மாதச் செம்மறியாடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படும். இதனை கட்டுப்படுத்த துள்ளுமாரி டாக்சாய்டு ஊசி ஆண்டுக்கு ஒரு முறை மழைக்காலத்திற்கு முன்னரும், குட்டி ஈனும் பருவங்களில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
The post ஆடுகளை தாக்கும் துள்ளுமாரி நோய் appeared first on Dinakaran.