சிவகங்கை, ஜன.26: ஆட்டிறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:ஆட்டிறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். ஆடு வதை செய்யுமிடங்களில் போதிய அளவு நீர் வசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும். நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஆட்டிறைச்சி விற்பனை செய்யுமிடத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். பணிபுரியும் பணியாளர்கள் மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பதிவு பெற்ற ஆட்டிறைச்சி கடைகளில் மட்டுமே பொதுமக்கள் ஆட்டு இறைச்சியை வாங்க வேண்டும். ஆட்டிறைச்சி வாங்கும்போது சில்வர் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற ஆட்டிறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் புகார் அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆடு வதை கூடங்களை சுகாதாரமாக வைத்திருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.